எலிமருந்து தின்று வாலிபர் தற்கொலை

by Staff / 28-03-2022 01:20:29pm
எலிமருந்து தின்று வாலிபர் தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணன் பெருமாள் கோவில் கரைமேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் (வயது 24).  இவர் அரியாங்குப்பம் பகுதியில் தங்கியிருந்து மணவெளியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அரியாங்குப்பம் அடுத்த இருசாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்  மனமுடைந்த வெங்கடேசன் கடந்த 21-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டார்.

இதற்கிடையே வெங்கடேசன் தனது தந்தை பாலகிருஷ்ணனிடம் போன் மூலம் தனக்கு வயிறு வலி இருப்பதாக கூறினார். இதனால் வெங்கடேசனை சொந்த ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் வயிறு வலி குணமாகவில்லை.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு பரிசோதனை செய்தபோது எலி மருந்து  தின்றிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி  அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via