மக்களவையில் திருநங்கைகள் திருத்த மசோதா அறிமுகம்

by Staff / 15-03-2026 01:16:18am
மக்களவையில் திருநங்கைகள் திருத்த மசோதா அறிமுகம்

மக்களவையில் திருநங்கைகள் திருத்த மசோதா 2026-யை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார் அறிமுகப்படுத்தினார். 2019 ஆம் ஆண்டின் திருநங்கைகள் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை இது செய்ய முயல்கிறது திருநங்கை என்ற சொல்லிற்கான தற்போதைய வரையறையை மாற்றி அதற்கு ஒரு துல்லியமான சட்ட விளக்கத்தை அளிக்க இந்த மசோதா முன்மொழிகிறது. தற்போதைய சட்டத்தில் உள்ள சுயமாக உணரப்பட்ட பாலின அடையாளத்திற்கான உரிமை என்ற அம்சம் இந்த மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது .திருநங்கைகளை கடத்துபவர்களுக்கும் அவர்களை வலுக்கட்டாயமாக பாலின மாற்றம் செய்யத் தூண்டுபவர்களுக்கும் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது. திருநங்கைகளாக அடையாளப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கு 5 லட்சம் வரை அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். திருநங்கைகளை பிச்சை எடுக்கவோ அல்லது கொத்தடிமைகளாக பயன்படுத்தவோ கட்டாயப்படுத்துபவர்களுக்கு பத்தாண்டு முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo