உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்னாள் முதல்வர்

by Staff / 06-05-2024 03:35:01pm
உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்னாள் முதல்வர்

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சோரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பெஞ்ச் முன் இந்த விஷயத்தை குறிப்பிட்டார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக பெஞ்ச் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo