யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்த இருவர் கைது

by Admin / 27-01-2022 03:59:42pm
யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்த  இருவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தெற்குப் புறமுள்ள சந்த மலைப் பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு இரு நபர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் எதிரே வந்த வனத்துறை அதிகாரிகளை பார்த்ததும் பயத்தில் தப்பியோடியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகளை தப்பியோடிய இருவரையும், மடக்கி பிடித்து விசாரித்தனர்.மேலும் அவர்கள் கொண்டு வந்த சாக்கு பையையும் சோதனை செய்தனர்.

அதில்  சுமார் 300 கிலோ எடையுள்ள இறந்த காட்டுப்பன்றியின் உடலும், வெடிமருந்தும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் இருவரும் ஆண்டிப்பட்டி வட்டம் பாலக்கோம்பையில்  உள்ள காந்தி என்பவர் மகன் சிவக்குமார் மற்றும் ,ஏத்தக் கோவிலை சேர்ந்த வேல்சாமி என்பதும் தெரியவந்தது இந்த இருவரும் தொடர்ந்து இது  போன்று  வனவிலங்கு 
 

 

Tags :

Share via