அமெரிக்காவின்புதிய சமூக ஊடக சரிபார்ப்பு கொள்கையினால் பல இந்தியபணியாளர்கள் கடும் பாதிப்பு
அமெரிக்காவின்புதிய சமூக ஊடக சரிபார்ப்பு கொள்கையினால் பல இந்திய [ஹெச்.ஒன்.பி h1b] பணியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். விசா புதுப்பித்தலின் போது விண்ணப்பதாரர்களின் கடந்த ஐந்து ஆண்டு கால சமூக ஊடக கணக்குகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் விண்ணப்பம் கூடுதல் சரிபார்ப்புக்காக மாற்றப்படுகின்றது. இதனால் இந்தியாவிற்கு விடுமுறையில் வந்த நூற்றுக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விசா முத்திரை பெறுவதில் சிக்கி... மீண்டும் அமெரிக்க திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். நீண்ட கால தாமதத்தால் பலருக்கு ஊதியம் இல்லா விடுப்பு அல்லது வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Tags :



















