பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸில் பொறுப்பு வழங்கக் கூடாது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.எஸ்.ராஜன்

by Editor / 26-04-2022 03:49:34pm
பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸில் பொறுப்பு வழங்கக் கூடாது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.எஸ்.ராஜன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சியில் ஏறத்தாழ நான் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறம்பட காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு குறிப்பாக தென் தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன் எனவே காமராஜரின் தொண்டராக காங்கிரஸ் வளர்ச்சிக்கு பேச வேண்டிய பொறுப்பு என்னிடம் இருப்பதாகவே நம்புகிறேன்.
அந்த வகையில் பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பு வழங்குவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் இளம் தலைவர் ராகுல் காந்தி திட்டமிடுவது அதிர்ச்சியளிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியில் இருந்தே விரட்டப்பட்டவர் பிரசாந்த் கிஷோர் சாதி அடிப்படையில் இந்தியாவில் அரசியல் செய்ய நினைக்கிறார் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸ் இவரை சேர்த்துக்கொண்டு பதவி கொடுத்தால் காங்கிரஸ் மேலும் பலவீனமடையும். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இது காங்கிரஸை இன்னும் பலவீனப்படுத்தும்.
 பணத்திற்காக அரசியல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோரை, வியூக நிபுணராக மட்டும் பயன்படுத்த வேண்டுமே தவிர, கட்சிக்குள் பொறுப்புக்கு கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். பிரசாந்த் கிஷோரைப் போலவே சுனில், ஜான், ரங்கேஸ், கிரீஸ் போன்ற எண்ணற்ற வியூக நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் தேர்தல் நேர வியூகத்திற்கு பயன்படுத்த வேண்டும் அதை விட்டு விட்டு செல்லாக்காசாக ஒரு மாநில கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் கிஷோருக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுப்பது காங்கிரஸ் கட்சிக்கு செய்யும் வெட்கக்கேடான செயலாகும் இதை தேசிய அளவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் சொல்ல தயங்குவதால் தான் நான் ஆணி தரகமாக சொல்கிறேன் எனவே அன்னை சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தீவிர கவனம் செலுத்தி பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் நலம் விரும்பும் அனைத்து தரப்பினர் சார்பில் கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via