பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட யாருமில்லை அண்ணாமலை

2024இல் 400 எம். பி. க்களையும் தாண்டி, மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவது உறுதி என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் யாத்திரை மேற்கொண்ட அவர், "தமிழகத்தில் சாமானிய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆட்சி நடக்கவில்லை. வளர்ச்சியை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும். மோடியை எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் யாரும் இல்லை. மோடிக்கு எதிராக ஆளுமை தலைவர்கள் இல்லை" என தெரிவித்துள்ளார்.
Tags :