21 தொகுதிகளின் பட்டியலை கொடுக்க உள்ள காங்கிரஸ்

by Staff / 28-01-2024 01:29:42pm
21 தொகுதிகளின் பட்டியலை கொடுக்க உள்ள காங்கிரஸ்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியலை திமுகவிடம் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம் ஆகியவற்றையும் விருப்ப தொகுதிகளாக காங்கிரஸ் பட்டியலில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo