மேட்டூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு.

by Staff / 14-07-2023 12:22:48pm
மேட்டூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு.

மேட்டூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு. மேட்டூர் அணை பூங்கா முன்பு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஹோட்டல் தமிழ்நாடு இயங்கி வருகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மேட்டூருக்கு வந்தார். அணை பூங்கா முன்பு உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். ஹோட்டலில் அறைகள் ஒவ்வொன்றாக திறந்து பார்த்த அமைச்சர் பராமரிப்பு பணிகள் மற்றும் வருவாய் குறித்து உடன் வந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தூக்கணாம்பட்டி காவிரி ஆற்றில் படகு சவாரி செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த அமைச்சர் கா. ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை மேம்படுத்த ஏற்காட்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்வராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அனைத்து துறைகளிலும் முதல் இடத்தை கைப்பற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மருத்துவத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் கோயில்கள் உள்ளன இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்தாண்டு சேலம் மாவட்டத்திற்கு 70 லட்சம் பேர் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர். தற்போது மூன்று மாதத்தில் 30 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். தமிழகத்தில் 300 சுற்றுளாதளங்களை இடங்களை தேர்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் டி. எம். செல்வகணபதி, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப்பு நந்தூரி, வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via