தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக மழை பொழிவு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
,
Tags :


















