வங்கி பெண் மேலாளரிடம் ரூ. 19. 50 லட்சம் மோசடி

by Staff / 22-03-2023 04:20:12pm
வங்கி பெண் மேலாளரிடம் ரூ. 19. 50 லட்சம் மோசடி


கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண், இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் திருமணம் செய்வதற்காக ஆன்லைனில் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்து இருந்தார். இதன் மூலம் வாலிபர் ஒருவர் அறிமுகமானார்.
அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம் என்றும், அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றுவதாகவும், கூறினார். திருமணம் செய்யவும் சம்மதம் தெரிவித்தார்.இதனை உண்மை என நம்பிய இளம்பெண் அவருடன் பழக ஆரம்பித்தார். பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தனர்.இந்நிலையில், ஜாபர் இப்ராஹிம் தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருவதாக கூறினார். கோவைக்கு வந்து இளம்பெண்னை பார்க்க ருவதாகவும்தெரிவித்தார்.இதை தொடர்ந்து நேற்று மீண்டும் செல்போனில் மூலம் ஜாபர் இப்ராஹிம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் உள்ளதாகவும், அமெரிக்காவில் வரும்போது 6. 80 லட்சம் அமெரிக்க டாலர்களை கொண்டு வந்து உள்ளதாகவும், அதற்காக சுங்கவரி கட்டுவதற்கு ரூ. 19. 50 லட்சம் வேண்டும் என்று கூறினார்.கோவை வந்தது அமெரிக்க டாலர்களை மாற்றி பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக கூறினார்.இதை உண்மை என நம்பிய இளம்பெண் அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ. 19. 50 லட்சம் பணத்தை அனுப்பினார். ஆனால், அதன் பின்னர் ஜாபர் இப்ராஹிம் கோவைக்கு வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via