டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையில் பேருந்துமோதி 18 மாடுகள் பலி.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். நேற்றுஇரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்த தொழு மாடுகள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்தன.இந்தவிபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநரான அழகர்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைசெய்துவருகின்றனர்.பலியான மாடுகளின் மதிப்பு சுமார் 6 இலட்சம் ரூபாய் என தகவல்.
Tags : டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையில் பேருந்துமோதி 18 மாடுகள் பலி.