வெடி விபத்து - 6 பெண்கள் பலி

by Editor / 16-06-2025 04:25:14pm
வெடி விபத்து - 6 பெண்கள் பலி

உத்தரப்பிரதேசம்: அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அட்ரசி கிராமத்தில் உரிமம் பெற்று இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் 6 பெண் பணியாளர்கள் உயிரிழந்த நிலையில், 12 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories