தமிழக பாஜகவில் பனிப்போர்.. அண்ணாமலை மீது தமிழிசை புகார்?

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தமிழிசை சௌந்தரராஜன் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற அண்ணாமலையே காரணம். அதுபோன்ற நிலை மீண்டும் வரக் கூடாது. கூட்டணி குறித்து பொதுவெளியில் அவர் கருத்து கூறக்கூடாது" என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் தமிழிசை வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள பனிப்போரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :