உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 14 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஓராண்டிற்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் இரண்டு ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. இந்தத் தாக்குதலில் உமான் நகரில் 9 மாடி கட்டிடம் அழிக்கப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.மேலும் 17 பேர் காயமடைந்தனர். நைப்பரில் நடந்த மற்றொரு தாக்குதலில் 31 வயது பெண்ணும் அவரது இரண்டு வயது குழந்தையும் உயிரிழந்ததாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்தார்.
Tags :