தமிழக சட்டசபைகூட்டம்.:ஊத்துமலை கிராமத்தில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

தென்காசி மாவட்டம் VK புதூர் தாலுகா ஊத்துமலை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்கள் மழையை மட்டுமே நம்பி உள்ள கிராமமாகும் இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில் இங்கு வேறு எந்த தொழிலும் தொழில் சாலைகளும் இல்லை என்பதை தங்கள் அறிந்ததுதான் இக் கிராம மக்களின் *50 ஆண்டு கால கோரிக்கையான இரைட்டை குளம் ஊத்துமலை கால்வாய் திட்டம்மாகும் பல முறை விவசாய சங்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளிக்கப்பட்டு அதன் பயனாக 2019 -2020 ஆண்டில் அப்போதைய ஆட்சியர் அவர்கள் (திருநெல்வேலி) அவர்களால் உத்தரவு பிறப்பித்தது அதன் படி சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகள் ஊத்துமலை பெரிய குளத்தில் இருந்து இரைட்டை குளம் (குலையநேரி அருகில்) வரை ஆய்வு(விவசாய சங்க நிர்வாகிகள் உடன்) செய்யப்பட்டது அதன் பின் அதிகாரிகளால் லெவல் எடுக்கப்பட்டது. முந்தைய ஆட்சியில் 2020-2021
ரூபாய் 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மண் பரிசோதனை மற்றும் ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு அப்போதைய 52 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது அதன் பின் தங்கள் தலைமையில் ஆன அரசு 2021- 2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டம் இன்று வரை நான்கரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது மேலும் இத்திட்டம் 8.70 கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே நிறைவேறினால் 13 கிராமங்கள் 167.13.5 ஹெக்டேர் நேரடியாக பாசனம் பெறும் மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 137.05 ஹெக்டேர் கிணற்று பாசனம் விவசாயம் பெறும் என அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இத்திட்டம் ஆய்வு செய்ததில் இருந்து தொடர்ந்து பல முறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற 14/10/2025 தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்
விவசாயத்தை அழிப்பினை செய்யும் காட்டு பற்றினை வனத்துறை மூலம் சுட்டு அழிக்கப்படும் என கடந்த ஜூன் 2024யில் சட்டசபையில் வனத்துறை அமைச்சர் அறிவித்தார்கள் ஆனால் இன்று வரை அரசு ஆணை வழங்க வில்லை தொடர்ந்து விவசாயத்தை அழிக்கும் காட்டு பற்றினை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீங்கிட வேண்டும் இக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஊத்துமலை கிராமத்தில் அக்டோபர் 14/10/2025 தேதியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கைகளை விடுத்த நிலையில் இன்று ஊத்துமலை கிராமத்தில் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.
Tags : தமிழக சட்டசபைகூட்டம்.:ஊத்துமலை கிராமத்தில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு