பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 25-03-2024 11:51:16am
பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலம், வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக பொருளாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்‌.பாலு மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கிக் கூறினர்.

 

Tags :

Share via