சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

by Staff / 05-07-2025 08:59:58am
 சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சின்னக்காமன்பட்டி பகுதியில் கடந்த 1ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தனியார் பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விபத்தில், தொழிற்சாலையில் பணியில் இருந்த 2 பேர் சடலமாக முதலில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து பலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Tags : சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

Share via