குழந்தைகளுக்கு நீரழிவு நோய்: குடும்பத்துடன் தற்கொலை

by Staff / 28-12-2022 11:01:34am
குழந்தைகளுக்கு நீரழிவு நோய்: குடும்பத்துடன் தற்கொலை

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (41), மனைவி பான்விழி (38), மகள்கள் நிதிக்ஷா (என்ற நேகா (6),மற்றும் அக்சரா (4). யுவராஜின் மூத்த மகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக நீரழிவு நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவரது இளைய மகளுக்கும் நேற்று முன்தினம் பரிசோதனை செய்ததில் நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த யுவராஜ் அடிப்பாளாறு காவிரி தனது இரண்டு மகள்களை வீசி கொலை செய்துவிட்டு தம்பதிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்துள்ளனர். மேலும் வீட்டில் தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார் அதில் நீரிழிவு நோயால் குழந்தைகள் சிரமப்படுவதை தாங்கி கொள்ள முடியவில்லை இதனால் தாங்கள் குடும்பத்துடன் சென்று தற்கொலை செய்து கொள்வதாகவும், எங்களை யாரும் தேடவேண்டாம் என்று எழுதி இருப்பதாக விசாரணைக்கு பின் போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo