புதிய அரசை அமைக்க முன்னாள்  அதிபருடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை

by Editor / 18-08-2021 03:52:41pm
புதிய அரசை அமைக்க முன்னாள்  அதிபருடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை


ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.


தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தலிபான்களின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆப்கன் அரசின் முன்னான் அமைதிக்கான தூதர் அப்துல்லா அப்துல்லாவும் இச்சந்திப்பின்போது இருந்ததாக தலிபான் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


காபூலை கைப்பற்றிய தலிபான் அமைப்பின் முக்கிய பிரிவாக ஹக்கானி பயங்கரவாத குழு உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லை பகுதியை மையமாக வைத்து இயங்கும் இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

 

Tags :

Share via