எல்.முருகன் கோ பூஜை செய்து சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது குல தெய்வ கோயிலான எஸ்.வாழவந்தி அருகே புதுப்பாளையத்தில் கோ பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தரிசனம் செய்தனர்.
பின்னர் கோனூரில் உள்ள தனது வீட்டில் பெற்றோர்களிடம் ஆசி பெற்று உறவினர்களிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் கோனூரில் எல்.முருகன் பயின்ற பள்ளியில் உடன் பயின்ற முன்னாள் மாணவர்களுடன் இணைந்து பனை விதைகளை தூவினார்.
Tags :