அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் : தமிழிசை கைது

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக – தமிழக பாரதிய ஜனதா கட்சி கையெழுத்து இயக்கத்தை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தென் சென்னை – விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். இதையடுத்து அனுமதியின்றி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியதாக தமிழிசையை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். ஆனால் கையெழுத்து வாங்கிட்டுதான் போவோம் இங்க இருந்து கலைந்து போக மாட்டோம் என தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
Tags :