மேல்மருவத்தூர் இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வைகை, பொதிகை, கொல்லம், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் 13 முதல் ஜனவரி 19 வரை தற்காலிக நிறுத்தம்.

by Editor / 03-12-2021 08:44:48pm
மேல்மருவத்தூர் இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வைகை, பொதிகை, கொல்லம், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் 13 முதல் ஜனவரி 19 வரை தற்காலிக நிறுத்தம்.

மேல்மருவத்தூர் இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வைகை, பொதிகை, கொல்லம், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 13 முதல் ஜனவரி 19 வரை நின்று செல்ல இருக்கிறது.
வண்டி எண் 12635/12636 சென்னை - மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12661/12662 சென்னை - செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், தென்காசி வழியாக இயக்கப்படும் வண்டி எண் 16101/16102 சென்னை - கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் , வண்டி எண் 16191/16192 தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 13 முதல் ஜனவரி 19 வரை பயணிகள் வசதிக்காக  நின்று செல்லும். மேலும் டிசம்பர் 19, 26 ஜனவரி 2, 9, 16  நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும்
வண்டி எண் 20895 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர எக்ஸ்பிரஸ், டிசம்பர் 17, 24, 31, ஜனவரி 7, 14 ஆகிய நாட்களில் புவனேஸ்வரில் இருந்து புறப்படும்  வண்டி எண் 20896 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், டிசம்பர் 15, 22, 29 ஜனவரி 5, 12, 19 ஆகிய நாட்களில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 22101 லோகமான்ய திலக் - மதுரை வாராந்திர ரயில், டிசம்பர் 17, 24,  31 ஜனவரி 7, 14 ஆகிய நாட்களில் மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 22102 மதுரை - மும்பை லோக்மான்ய திலக் வாராந்திர ரயில், டிசம்பர் 15, 22, 29 ஜனவரி 5, 12, 19 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 22535 ராமேஸ்வரம் - பனாரஸ் வாராந்திர ரயில், டிசம்பர் 19, 26 ஜனவரி 2, 9, 16 ஆகிய நாட்களில் பனாரஸில் இருந்து புறப்படும் வண்டி எண் 22536 பனாரஸ் - ராமேஸ்வரம் வாராந்திர ரயில், டிசம்பர் 17, 19, 24, 26, 31 ஜனவரி 2, 7, 9, 14, 16 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 22623 சென்னை - மதுரை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ், டிசம்பர் 16, 18, 23, 25, 30 ஜனவரி 1, 6, 8, 13, 15 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண் 22624 மதுரை - சென்னை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

 

Tags :

Share via