சட்டமன்ற உறுப்பினர்மாநகராட்சியில்  உள்ளிருப்பு போராட்டம்

by Editor / 30-12-2022 07:29:04pm
சட்டமன்ற உறுப்பினர்மாநகராட்சியில்  உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சியில் 12 வது வார்டில் புதிதாக திறக்கப்பட்ட நல்வாழ்வு பரிசோதனை மைய பதிய கட்டிடத்தில்  பாஜக கவுன்சிலர் சுனில் குமார் பெயரை சேர்க்கவில்லை எனவும் பாஜக கவுன்சிலர் ஆனதால் அவரை புறங்கணித்தாகவும் கூறி    பாஜக மாமன்ற உறுப்பினர்கள் இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தை புறங்கணித்து காலை முதலே  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் பாஜக மாமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக  நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்‌.ஆர்‌.காந்தி பாஜக மாமன்ற‌ உறுப்பினர்களுக்கு   ஆதரவு கொடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via