திருச்சி அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவியிடம் பாலியல் தொல்லை தாளாளர் கைது

திருச்சி வண்ணாரப்பேட்டை புத்தூர் பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி இயங்கிவருகிறது.அரசு உதவி பெறும்
இந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார்.அந்த பள்ளின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்கான ஷீபர் விடுதி செயல்பட்டுவருகிறது. இருபாலரும் அந்த விடுதியில் தங்கி பயின்றுவருகின்றனர்.இந்த பள்ளியில் பயின்று வந்த மாணவிக்கு தாளாளராக இருக்கும் ஜேம்ஸ் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பரவலாக அரசல்புரசலாக பள்ளிவளாகத்தில் தகவல்கள் கசியவே தாளாளர் தன்னை திருத்தி கொள்ளவில்லையென கூறப்படுகிறது.இந்த நிலையில் மாணவியிடம் அதிகளவில் சீண்டல்களில் ஈடுப்படவே அந்த மாணவி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் உறையூர் காவல் நிலையத்தில் வைத்து ஜேம்ஸிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்தனர்.இதனிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :