தாமிரபரணியில் மணல் அள்ளக் கூடாது பாபநாசம் முதல் தூத்துக்குடி வரை பைக் பேரணி
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை டி.எஸ். எஸ். எஸ். வளாகத்தில் பொதுச்செயலாளர் அய்கோ தலைமையில் நடந்தது. துணைத் தலைவி விஜயா, நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ஜெயபாலன் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உமா வரவேற்றார்.
கூட்டத்தில் அருட்தந்தையர்கள் ( பாதிரியார்கள்) போஸ்கோ, மை பா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வக்கீல் முத்துப்பாண்டி, பால் அண்ணாதுரை, நம்பிராஜன் ஆகியோர் பேசினர். அருணகிரி, அருள்ராஜ், செல்வி, முத்து பாப்பா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் வரும் 26-ஆம் தேதி தாமிரபரணியில் மணல் அள்ளக் கூடாது என்று வலியுறுத்தி பாபநாசம் முதல் தூத்துக்குடி வரை இருசக்கர பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனு அளிப்பது, தொடர்ந்து 15 நாட்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்துவது, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகளை சித்தரிக்கும் 12 ஆவது ஆண்டு மலர் வெளியிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரகாஷ் நன்றி கூறினார்.
Tags : Do not dig sand in Tamiraparani Bike rally from Papanasam to Thoothukudi