பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - 3.60 லட்சம் சிக்கியது.
விழுப்புரம் அடுத்த மயிலத்தில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் பத்திர பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக பல்வேறு புகார்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து வந்த நிலையில் இன்று இரவு 8.00 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழு திடீர் சோதனை மேற்கொண்டது
நேற்று மாலை 7 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நடைபெற்ற சோதனையில் நேற்று ஒரு நாளில் நடைபெற்ற பத்திர பதிவுகளில் கணக்கில் வராத 3.60 லட்சம் ரூபாய் சிக்கியது இதனை அடுத்து சார்பதிவாளர் சங்கீதா மற்றும் இடைத்தரகர் பாலமணிகண்டனிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் 3.60 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் எந்தெந்த பத்திர பதிவுகளுக்காக யார் யாரிடம் இந்த பணம் பெறப்பட்டுள்ளது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - 3.60 லட்சம் சிக்கியது.