ஸ்டாலினை சந்தித்த் தமிழிசை செளந்திரராஜன்:

by Editor / 21-06-2021 09:22:03am
  ஸ்டாலினை சந்தித்த்  தமிழிசை செளந்திரராஜன்:

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின்முதல் முறையாக கடந்த மாதம் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவரை மரியாதை நிமித்தமாக பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சந்தித்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக புதுவை துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் இரு மாநில நல்லுறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவராக முக ஸ்டாலின் அவர்களும், பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும், இருந்த போது இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் தற்போது இருவரும் உயர்பதவிகள் இருக்கும் நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து இருப்பது அரசியல் நாகரீகமாகவே கருதப்படுகிறது.

 

Tags :

Share via