ஊரடங்கில்புதிய தளர்வுகள விவரம்

by Editor / 21-06-2021 09:17:24am
 ஊரடங்கில்புதிய தளர்வுகள விவரம்

 


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மேலும் ஒரு வார காலம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்ட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வகை 1 (11 மாவட்டங்கள்)

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை

வகை 2 (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல் கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்

வகை 3 (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

வகை 1 மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள தளர்வுகள் மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

வகை 2 மாவட்டங்களுக்கான தளர்வுகள்:

- மளிகை கடைகள், பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்படலாம்.

- காய்கறி, பழம் மற்றும் பூ கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்படலாம்.

-உணவகங்கள், பேக்கரிகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டும் செயல்படலாம். இந்த நேரங்களில் மின் வணிக நிறுவனங்களும் செயல்படலாம்

-இதர மின் வணிக சேவைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படலாம்.

-இனிப்பு மற்றும் கார வகை விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படலாம்.

-அரசு அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம். இதர அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.

-தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்.

-ஹார்டுவேர் கடைகள், எலக்டிரானிக் கடைகள், மிதிவண்டி, இருசக்கர பழுது நீக்கம் கடைகள், வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஸ்டேஷனரி கடைகள், கண் கண்ணாடியகங்கள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரிக்கல் பொருட்கள் ரிப்பேர் செய்யும் கடைகள், செல்பேசி கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

-காலை 6 முதல் மாலை 5 வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

-வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இபதிவுடன் செய்ய அனுமதிக்கப்படுவர்.

வகை 3ல் உள்ள மாவட்டங்களுக்கான தளர்வுகள்:

- மளிகை கடைகள், பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்படலாம்.

- காய்கறி, பழம் மற்றும் பூ கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்படலாம்.

-உணவகங்கள், பேக்கரிகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டும் செயல்படலாம். இந்த நேரங்களில் மின் வணிக நிறுவனங்களும் செயல்படலாம்

-இதர மின் வணிக சேவைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படலாம்.

-இனிப்பு மற்றும் கார வகை விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படலாம்.

-குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்களுக்கான போக்குவரத்து இ-பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படும்.

-அனைத்துவித கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி.

-அரசு அரசுத் துறைகளுக்கான அலுவலகங்களும் 100% பணியாளர்களுடன் செயல்படலாம்.

-தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.

-மின் பணியாளர், பிளம்பர்கள், கணனி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

-ஹார்டுவேர் கடைகள், எலக்டிரானிக் கடைகள், மிதிவண்டி, இருசக்கர பழுது நீக்கம் கடைகள், வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஸ்டேஷனரி கடைகள், கண் கண்ணாடியகங்கள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரிக்கல் பொருட்கள் ரிப்பேர் செய்யும் கடைகள், செல்பேசி கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.

-தேநீர்க் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

-சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி.

-காலை 6 முதல் மாலை 5 வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

-அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடனும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படும்.

-திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் அனுமதிக்கப்படும். அதில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.

-மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

-நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

-சென்னை, திருள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

-வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இபதிவு இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

 

Tags :

Share via