விசிக,காங்.வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம்.

by Editor / 05-04-2024 09:34:12am
விசிக,காங்.வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர்  இன்று பிரச்சாரம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்று(ஏப்ரல் 5) விழுப்புரத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

 

Tags : விசிக,காங்.வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம்.

Share via

More stories