பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் இந்த வானிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழை தொடர்வதற்கான சூழல் உருவாகி உள்ளது.. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் உள்புற மாவட்டங்களான நீலகிரி. கோயம்புத்தூர். திருப்பூர் ..ஈரோடு. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர் .திருவாரூர் .நாகப்பட்டினம். மயிலாடுதுறை. கடலூர். விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம். செங்கல்பட்டு .திருவள்ளூர் .திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் வானிலை எச்சரிக்கையா கை கவனமாக பின்பற்றிய பிறகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :


















