திமுக 36 பேர் கொண்ட கள ஆய்வு ஆலோசனை குழு- திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்
நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் தோல்விக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் நானே முழு பொறுப்பு என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். கூட்டத்தில் திமுக 234 தொகுதிகளிலும் ஆராய்ந்து உண்மை நிலவரத்தை தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிய 36 பேர் கொண்ட கள ஆய்வு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடியது. கூட்டத்தில் திமுக தலைவர் மு. க .ஸ்டாலின், நீங்கள் எனது காதுகளாக செயல்பட வேண்டும் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும் உண்மையான விமர்சனங்களை எனது சொந்த செயல்பாடுகள் குறித்த விமர்சனமாக இருந்தாலும் அதை அப்படியே என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் யாரையும் காப்பாற்றவோ அல்லது தனிப்பட்ட முறையில் யாரையாவது பழிவாங்குவோ இந்த அறிக்கை பயன்படுத்தக் கூடாது என்றும் கட்சியின் தற்போதைய நிலவரத்தை ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டாக துல்லியமாக தயாரித்து தரப்பட வேண்டும் என்றும் கூறியதோடு வரும் மே 18ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வை செய்ய பணித்தார். சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலான விரிவான இறுதி அறிக்கையை ஜூன் 5க்குள் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளார் இந்த அறிக்கையின் அடிப்படையில் திமுக 2.0 என்ற பெயரில் அதிரடியான சில மாற்றங்களை செய்ய உள்ளதாகவும் தெரிகிறது. இக்குழுவில் எழிலரசன் சோழராஜன் பூச்சி முருகன் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
Tags :



















