சினிமா, டிவி விருதுகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் உறுதி
கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்படத் மற்றும் சின்னத்துரை துறையினருக்கான விருதுகள் வழங்கப்படவில்லை. இவற்றை விரைந்து வழங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் பெ.சாமிநாதன் கூறியுள்ளார்.
மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ₹1.80 கோடி ரூபாயில் 40 அடி உயரத்தில் கைவினை சுற்றுலா கிராமத்திற்கான பிரம்மாண்ட ஸ்தூபி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை யின் 2021 22ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறியீட்டை அமைச்சர் பெ.சாமிநாதன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘சென்னை பெருநகரில் உள்ள 14 மணி மண்டபங்கள் நினைவகங்கள் கலைவாணர் அரங்கம் ஆகியவற்றை ரூபாய் 5 லட்சம் செலவில் 360 டிகிரி பரிமாணத்தில் படமெடுத்து செய்தித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து மற்ற மண்டபங்கள் நினைவகங்கள் ஆகியவற்றை படமெடுத்து பதிவேற்றம் செய்யப்படும். சென்னை மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் ரூ.5.61 கோடி மதிப்பில் அமைக்கப்படும். திரைப்பட படப்பிடிப்பு அனுமதி இணைய வழியாக வழங்குவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விடுபட்ட ஆண்டுகளுக்கும் மாணவர்கள் தயாரித்த குறும் படங்களை பார்வையிட்டு சிறந்த குறும்படங்களை தெரிவு செய்து விருதுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் அங்கீகரிக்கப்பட்ட செயதியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, 5 ஆயிரத்து 48 பேருக்கு சிறப்பு ஊக்கத்தொகை தலா ரூ.5 ஆயிரம் வீரம் மொத்தம் ரூ.2 கோடியே 52 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்ட அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் விண்ணப்பித்ததன் பேரில், சுமார் 1000 செய்தியாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ. 50 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்ால் உயிரிழந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பிரிவினரின் வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டு, இதுவரை 10 செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம், ரூ. 1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Tags :