பிஸ்கட் கொடுத்து விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்

by Editor / 14-07-2025 04:27:58pm
 பிஸ்கட் கொடுத்து விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் நாய் உடன் சிறுமி பிஸ்கெட் கொடுத்து விளையாடிய போது கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாயின் பிடியில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via