40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் சீமான்.

by Editor / 23-03-2024 09:23:09am
40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் சீமான்.

மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் இன்று மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், 20 ஆண் வேட்பாளர்கள், 20 பெண் வேட்பாளர்களை ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து, இன்றைய தினமே கட்சியின் சின்னத்தையும் அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது. 

 

Tags : 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் சீமான்.

Share via