சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

by Admin / 23-03-2024 12:01:52am
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின..டாஸ்  வென்ற பெங்களூர் அணி களத்தில் இறங்கியது. இருபது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த சென்னை அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.. 18 ஓவர் முடிவில் சென்னை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. டோனியின் வருகையை ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் , ஒரு சிக்ஸர் அடித்து ஒன்பது பந்துகள் மீதம் இருக்கையில் இரண்டு ரன்கள் தேவைப்படுகிற நிலையில் 18 புள்ளி 4 ஓவரில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
Tags :

Share via