மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

by Staff / 13-03-2024 03:18:26pm
 மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு நகல் வெளியிடப்பட்டுள்ளது.
பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானதை அடுத்து, அதனை பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்ட உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும். தீர்ப்புக்கு தடை வழங்கியதை அடுத்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை சார்பில் கடிதம் எழுதப்படும். பொன்முடி குற்றமற்றவர் என்ற சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதாக இருக்கும் என்ற கோணத்தில் அணுக ஐகோர்ட் தவறிவிட்டது. எனவே, மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி 'காலி' என்ற அறிவிப்பு வாபஸ் ஆகிறது.

 

Tags :

Share via

More stories

Logo