சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி, ஓய்வு பெற்றதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில், நீதிபதி வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோவையில் பிறந்து, சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Tags : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்