ஒரு ஆலயத்தினால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது தெரியுமா..?

by Editor / 26-04-2022 08:57:41am
ஒரு ஆலயத்தினால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது தெரியுமா..?

பூ உற்பத்தி செய்பவர்கள்,
* மாலையாக கட்டுபவர்கள்,
* அதனை விற்பனை செய்பவர்கள்,
* அர்ச்சகர்கள்,
* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்,
* கோயில் காவலாளிகள்,
* தேங்காய் உற்பத்திசெய்பவர், 
* தேங்காய் விற்பனைசெய்பவர்,
* ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்,
* அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்)
* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள், 
* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,
* சந்தனம், குங்குமம், பழவகைகள், ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்

* பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள்,
* வாழைமரம் வளர்ப்பவர்கள்
* அவற்றைவிற்பனைசெய்பவர்கள்,
* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,
* இதில் மாற்று மதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,

* வாசலில் அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள்
* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்,
* அதன் ஓட்டுனர்கள்,
* கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான பணி ஊழியர்கள்,

* மடப்பள்ளியில், (சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)
* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.

* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர் தொடக்கம் 
முகாமையாளர் வரை
* உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்,
* கோவில் பூஜாரிகள், ஓதுவார்கள், பண்டாரத்தார்,
* நாதஸ்வர, தவில் கலைஞர்கள்,
* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்,
* சிற்ப கலைஞர்கள்,
* ஓவியர்கள்,
* கட்டட கலைஞர்கள்,
* ஆசாரிமார்கள்,
* விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,
இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கிறது.
என்பதால்தான் அன்றைய
மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை 
உருவாக்கினார்கள்.

தமிழ் மண்ணையும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரத்தையும், ஆன்மீக மாண்பையும், தெய்வீக வழிபாடுகளும் சிறப்பாக கட்டிக்காத்த 
தமிழ் மன்னர்கள், 
வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

வருகின்ற இளைய தலைமுறைகள்
நமது பாரம்பரியத்தையும் கட்டிக்காத்து பாதுகாக்க வேண்டும்...!!!

 

Tags :

Share via