அமெரிக்காவில் 246-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்
அமெரிக்காவில் உருவான 246-வது ஆண்டு தினம் அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சுதந்திர தின நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வாஷிங்டன் டி.சி.யில் தேசிய சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. இசை வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த கண்கவர் அணிவகுப்பை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இதேபோல், இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடங்களில், அங்கு வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதனால், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.இத்தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். சுதந்திர நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அவசரமாகத் தேடுவதற்கு உதவிடுமாறு மத்திய சட்ட அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Tags :