இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
தென்காசியில் நடைபெற்ற இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம் கட்சியின் புதிய நிர்வாகிகள் முறையாக தேர்வு செய்யப்படவில்லை என்று கட்சியினருக்கு இடையே வாக்குவாதம்
இன்று தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் வழியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முகமது அபுபக்கர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். நிர்வாகிகளை முடிவு செய்ய பொதுக்கூட்டத்தை அழைத்துவிட்டு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கட்சி நிர்வாகிகளை ஏற்கனவே முடிவு செய்து அறிமுகப்படுத்தியது கட்சியினருக்கு இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கட்சியினர் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்திய தீர்மானத்தை எதிர்த்து கோஷம் போடத் தொடங்கினர் மற்றொரு பக்கம் கட்சியின் ஆதரவாளர்களோடு தீர்மானம் ஆனது நிறைவேற்றப்பட்டது . தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது எதிர்த்து மேடையை நோக்கி செல்ல முற்பட்ட கட்சியினரை மாவட்ட பொதுச் செயலாளரின் ஆதரவாளர்கள் தடுக்க முற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் போலீசாரின் உதவியுடன் சூழ்நிலையானது கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளரின் முடிவை ஏற்க மறுத்த கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags : இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம்