பிரபுதேவா படக்குழுவுக்கு இலங்கை பிரதமர் பாராட்டு

by Staff / 01-10-2023 05:36:40pm
பிரபுதேவா படக்குழுவுக்கு இலங்கை பிரதமர் பாராட்டு

இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'முசாசி'. இந்த படத்தில் பிரபுதேவா காவல் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், இலங்கை நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன படக்குழுவினருக்கு பிரத்யேக அழைப்பு விடுத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் படக்குழுவினருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via