கோவை சேலம் மெமு ரயில் சேவை ரத்து

by Staff / 31-10-2022 12:40:33pm
 கோவை சேலம் மெமு ரயில் சேவை ரத்து

தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு காவிரி ரயில் நிலையம் முதல் ஈரோடு ரயில் நிலையம் வரையிலான தண்டவாளப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோவை - சேலம் இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் வரும் நவம்பர் மாதம் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ரயில், கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் ரயில் சேவையானது இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் வண்டி எண் 06803 சேலம் - கோவை இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில், சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில் சேவை இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via