இஸ்லாமிய புரட்சிகர காவல் படை படகுகள் மீது அமெரிக்காதற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கருகே அமெரிக்கப் படைகள் ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணி வெடிகளைப் பதிக்க முயன்ற இஸ்லாமிய புரட்சிகர காவல்படைபடகுகள் மீது அமெரிக்காதற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
.போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சிகத்தார் தலைநகர் தோஹாவிற்கு வந்தடைந்த நேரத்தில் இத்தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
தெற்கு ஈரானில் உள்ள முக்கிய கடற்படை தளமான பந்தர் அப்பாஸ் ஜாஸ்க் மற்றும் சிரிக் ஆகிய கடலோரப் பகுதிகளில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன
.ஈரானியப் படைகள் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவ முயன்றதாகவும், கடலில் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்றதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
தங்களது படைகளைப் பாதுகாப்பதற்காகவே ,இந்த தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
இந்தத் தாக்குதலை கடுமையான போர்நிறுத்த மீறல் மற்றும் அமெரிக்காவின் நம்பிக்கையற்ற தன்மை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
இத்தாக்குதலில் ஈரானிய கடற்படையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கத்தாரின் பிரதமரின் முன்னிலையில் தோஹாவில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையை ஈரான் கைவிடவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் வர்த்தகப் போக்குவரத்திற்குத் திறப்பது, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது போன்றவை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈரானுடன் ஒரு நல்ல உடன்படிக்கையை எட்டுவது சாத்தியமே என்றும் இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு எட்டப்படலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags :



















