அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பக்ரீத் திருநாள் வாழ்த்து செய்தி

by Admin / 28-05-2026 02:13:33am
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பக்ரீத் திருநாள் வாழ்த்து செய்தி

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயில் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் ஈடு இறையற்ற தியாகத்தை நினைவு கூறும் தினமே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னால் இன்னாள் ஆகும் .நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தழை கற்களாக திகழ்கின்ற அதர்மம் அநீதி சூழ்ச்சி வன்மம் ஆகியவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒளித்து நான் சிந்தனைகளும் நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்ற தியாகங்கள் அற்பணிப்புகளும் தேவைப்படும் இறைத்தூதரின் தியாகங்களை மனதில் மதித்து மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் இஸ்லாமிய பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகில் அன்பும் அமைதியும் தல துவங்கிட அனைவரும் மனிதநேயத்துடனும் சகோதரத்துவத்துடன் தியாகச் சிந்தனையுடனும் வாழ்த்திட வேண்டும் என்று மனதார வாழ்த்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியவதி நல்வழியில் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo