திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் பக்ரீத் திருநாள் வாழ்த்து
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில் என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவராக திகழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும் ஈத்துவக்கும் இன்பம் என்று வள்ளுவ பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகை பண்போடு ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ் வரமாக கொண்டு நபிகள் நாயகம் வழங்கி அறிவுரைகளை வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலை பெறட்டும். இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு அரசியல் மற்றும் சமூக காரணங்களை தாண்டிய ஆழத்தையும் மேன்மையையும் உண்மையான பிழைப்பையும் கொண்டது கழகம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோல் நின்று போராடும் உணர்வை கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்க தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை இந்த நன்னாளில் மேலும் உறுதி செய்ய விரும்புகிறேன். இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் மீண்டும் உரித்தாக்கு கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags :


















