குழந்தை திருமண விவகாரத்தில் இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை

by Staff / 25-05-2023 11:26:30am
குழந்தை திருமண விவகாரத்தில் இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் டெல்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று மாலை அதிகாரிகளுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர், தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தியதுடன், சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதா? எனவும் கேட்டறிந்தார். விசாரணையில், சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் இல்லை. ஆனால் பிரைவேட் பார்ட் பரிசோதனை செய்தது உண்மை. விசாரணை அறிக்கையின் பேரில் 2 அல்லது 3 நாட்களில் நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.

 

Tags :

Share via