இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு

by Staff / 08-10-2023 01:26:50pm
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதி காஜி ஹமீட் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் ஒரே நேரத்தில் 5,000 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கின்றது. ஹமாஸின் அறிவிப்பின் மூலம் அது உண்மை என்பது நிரூபணமாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via