"கோயிலில் முதல் மரியாதை வழங்க கூடாது" உயர்நீதிமன்றம்

by Editor / 27-06-2025 03:43:55pm

கோயில்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பர்கூர் பந்தீஸ்வரர் கோயிலில் முதல் மரியாதை வழங்கக்கோரி தேவராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், முதல் மரியாதை கேட்பதன் மூலமாக கடவுளைவிட தங்களை மேலானவராக கருதுகின்றனர். பல கோயில்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை வர காரணமே இந்த முதல் மரியாதை வழங்கும் நடைமுறைதான்' என நீதிபதிகள் கடிந்துள்ளனர்.

 

Tags :

Share via