ராதாரவி விமர்சனம்......அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பாலும் திமுகவின் அமைச்சர்கள்

by Editor / 05-07-2022 03:11:07pm
ராதாரவி விமர்சனம்......அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பாலும் திமுகவின் அமைச்சர்கள்

திமுகவில் அமைச்சர் பதவிகளுக்குக் கூட ஆட்கள் இல்லை என்றும், அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பாலும் திமுகவில் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும் ராதாரவி விமர்சனம் செய்துள்ளார்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய ராதாரவி, குவார்ட்டர், பிரியாணி தந்து வளர்ந்த கட்சி பாஜக இல்லை என்றும், தயிர்சாதம் சாப்பிட்டு வளர்ந்த கட்சி என்றும் கூறினார்.அண்ணாமலையை வளர்த்துவிட்டதே திமுக தான் என்றும், மகாராஷ்டிரா போல் விரைவில் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் வரும் என்றும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என்றும் சாடினார்.தொடர்ந்து பேசிய அவர்  பாஜக கூட்டணியில் பல கட்சிகளை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், கட்சியில் இருக்கும் ஆட்களுக்கே தேர்தலில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றும் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo